கோவையை அடுத்த பேரூர் அருகே சிறுவாணி மெயின் ரோடு புலவபட்டி பகுதியில் நேற்று காலை 9.30 மணிக்கு காந்திபுரம் செல்வதற்கான பெண்கள் பேருந்துக்காக காத்திருந்தார்கள். அவர்கள் திடீரென அந்த வழியாக வந்த அரசு பஸ்ஸை சிறை பிடித்துள்ளனர். இதனை அடுத்து அவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அந்த வழியாக காந்திபுரம் நோக்கி வந்த மேலும் 4 பேருந்துகளை சிறைபிடித்தனர். இது பற்றிய தகவல் அறிந்த ஆளாந்துறை போலீசார் விரைந்து வந்து அவர்களிடம் பேச்சுவார்த்தை மேற்கொண்டார்.
அப்போது பொதுமக்கள் தரப்பில் கடந்த ஒரு வாரமாக பேருந்துகள் குறிப்பிட்ட நேரத்திற்கு வருவதில்லை. இதனால் வேலைக்கு செல்ல முடியாத நிலை இருக்கின்றது. மேலும் இரண்டு நாட்களாக ஆளாந்துறை அரசு பள்ளியில் நிறுத்தத்தில் பேருந்து நிற்காமல் சென்றுள்ளது. இதனால் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம் என தெரிவித்துள்ளனர்.
இதனை தொடர்ந்து பொதுமக்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை மேற்கொண்டு காந்திபுரம் செல்ல இருந்த 4 பேருந்து சாடி வயல் செல்ல இருந்த 1 அரசு பேருந்து உட்பட மொத்தம் ஐந்து அரசு பேருந்துகளை போலீசார் விடுவித்துள்ளனர். மேலும் சாலை மறியல் காரணமாக அந்த ரோட்டில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.