Categories
மாநில செய்திகள்

ஒரு வழியா முடிஞ்சு…. இன்னும் 4 நாட்களுக்கு இங்கெல்லாம் மழை பெய்யாது…. வானிலை ஆய்வு மையம் தகவல்….!!!!

இந்திய வானிலை ஆய்வு மையம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

இந்திய வானிலை ஆய்வு மையம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் வங்கக் கடலில் கடந்த வாரம் உருவான காற்றழுத்த தாழ்வு  மண்டலம் காரணமாக தமிழகத்தில் உள்ள பல மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது. தற்போது இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவிழந்துள்ளது.

இதனால் அடுத்த 4  நாட்களுக்கு தமிழகத்தில் வறண்ட வானிலை காணப்படும். இந்நிலையில்  வடக்கு அந்தமான் கடலோர பகுதியில் அடுத்த 24 மணி நேரத்தில் புதிதாக வளிமண்டல சுழற்சி உருவாக வாய்ப்புள்ளது. மேலும் சென்னையை  பொறுத்தவரை வானம்  மேகமூட்டத்துடன் காணப்படும். மேலும் லேசான மழை பெய்யும் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Categories

Tech |