கிரிக்கெட் வீரர் விராட் கோலியின் மகளது புகைப்படம் முதன்முறையாக சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.
பிரபல கிரிக்கெட் வீரர் விராட் கோலி பாலிவுட் நடிகையான அனுஷ்கா சர்மாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு கடந்த ஆண்டு ஒரு பெண் குழந்தை பிறந்தது இந்த குழந்தைக்கு வாமிகா என பெயர் சூட்டி இருந்தனர். அடிக்கடி தனது குழந்தையின் புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்த இந்த தம்பதி குழந்தையின் முகத்தை மட்டும் காட்டவில்லை. இதுகுறித்து அனுஷ்கா சர்மாவிடம் கேள்வி எழுப்பியபோது சமூக ஊடகங்களில் இருந்து விலகி குழந்தை தனது வாழ்க்கையை சுதந்திரமாக வாழ வேண்டும் என எண்ணி தான் சமூக வலைதளங்களில் குழந்தையின் புகைப்படத்தை வெளியிடவில்லை என கூறியிருந்தார்.
https://twitter.com/shanthansaka/status/1485266233763446792
இந்நிலையில் நேற்று தென் ஆப்பிரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் இடையேயான கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. இதில் விராட்கோலி அரைசதம் அடித்தார் அதனை தனது மகளுக்கு அர்ப்பணிப்பதாக கூறினார். அப்போது இந்த போட்டியை பெவினியாவிலிருந்து அனுஷ்கா சர்மா தனது குழந்தையுடன் கண்டுகளித்து கொண்டிருந்தார். அந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.