ஒரு வருடத்திற்கு பின், மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் அன்னதானம் வழங்கப்படுகிறது.இதனால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைத்துள்ளனர் .
மதுரை மாவட்டத்தில் புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சிறப்பு வாய்ந்ததாகும். இக்கோவிலுக்கு தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து வழிபாடு செய்து வந்தனர். இக்கோவிலுக்கு வெளியூரில் இருந்தும் பக்தர்கள் வந்து வழிபடுவர்.
இதனால் இக்கோவிலில் தினமும் மதிய வேளையில் அன்னதானம் வழங்கப்பட்டது. ஆனால் கொரோனநோய் தொற்று காலத்தில் அன்னதானத்திற்கு தடை செய்யப்பட்டது. இதனால் இக்கோவிலுக்கு வெளியே உள்ள ஏழை மக்கள் உணவின்றி தவித்தனர். கோயில் நிர்வாகம் அவர்களுக்கு கலவை சாதங்களை பார்சல் கட்டி வழங்கப்படுகிறது.
இந்நிலையில் தமிழக அரசு கொரோனா ஊரடங்கு விதிகளை தளர்த்தி வருவதால், இன்று முதல்(புதன்கிழமை ) பக்தர்களுக்கு கோவிலுக்குள் அன்னதானம் வழங்க அனுமதி அளித்துள்ளது. இதன்படி மீனாட்சியம்மன் கோவிலில் பகல் 12 மணி அளவில் பக்தர்களுக்கு பிரசாதம் பார்சல் கட்டி வழங்கப்படுகிறது. கடந்த ஒரு வருடத்திற்கு பின் , அன்னதானம் வழங்கப்படுவதால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.