Categories
உலக செய்திகள்

ஒரு லட்சம் டன் எரிபொருள் சேதம்… ரஷ்யாவின் பயங்கரவாத தாக்குதல்… பாதுகாப்பு அமைச்சகம் கருத்து…!!!!!

உக்ரைன்  ரஷ்யா இடையான போர் பல மாதங்களைத் தாண்டி தொடர்ந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் ரஷ்ய ஏவுகணைகள் உக்ரைன் மின் உற்பத்தி நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இதன் காரணமாக உக்ரைன் பெரும்பாலான பகுதிகள் மின்தடையால் இருளில் மூழ்கி இருக்கிறது. இந்த சூழலில் ஒரு லட்சம் டன் விமான எரிபொருள் சேமித்து வைக்கப்பட்டிருந்த கிடங்கு ஒன்று அளிக்கப்பட்டதாக ரஷ்யாவின் பாதுகாப்பு துறை அமைச்சகம் கூறியுள்ளது.

மேலும் இது பற்றி ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள பதிவில் செர்காசி பகுதியில் உள்ள சிம்லா கிராமத்தில் உள்ள ஒரு எரிபொருள் கிடங்கில் உக்ரைன் விமான படைகளுக்கு உபயோகப்படுத்த ஒரு லட்சம் டன்களுக்கும் அதிகமான விமான எரிபொருள் சேமித்து வைக்கப்பட்டிருந்தது அந்த எரிபொருள் கிடங்கு அளிக்கப்பட்டுள்ளது என கூறப்பட்டிருக்கிறது.

Categories

Tech |