உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து 38 நாட்கள் கடந்துள்ள நிலையில் அந்நாட்டின் தலைநகரை சுற்றியுள்ள பகுதிகளிலிருந்து ரஷ்ய படைகள் வெளியேறி வருவதாக உக்ரைன் ராணுவ அதிகாரிகள் கூறியுள்ளனர். உக்ரைன் மீது தாக்குதல் நடத்தியுள்ள ரஷ்ய படைகள் மருத்துவமனைகள், குடியிருப்பு பகுதிகள் என உக்ரைன் அரசுக்கு பெரிய அளவில் பொருட் சேதத்தை ஏற்படுத்தி உள்ளன. உக்ரைனின் மரியுபோல் நகரம் ரஷ்ய வீரர்களால் சிதைக்கப்பட்டிருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
ரஷ்யப் படைகளால் கொள்ளையடிக்கப்பட்ட உக்ரைன் பொருட்கள் அண்டை நாடான பெலாரஸில் விற்பனை செய்யப்பட்டு வருவதாக உக்ரைன் உளவுத்துறை தகவல் தெரிவித்துள்ளது. இந்நிலையில் ரஷ்ய படையெடுப்பால் உக்ரைனுக்கு 10 பில்லியன் டாலர் பொருட்சேதம் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.