Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ஒரு போலீஸ் செய்யுற வேலையா இது?…. நீங்களே இப்படி பண்ணா மக்கள் எங்கே போவாங்க…. நிர்வாணமாக அராஜகம்….!!!!

சென்னை அம்பத்தூரில் உள்ள ஓரகடம் ஏ .கே நகரில்  கிருஷ்ணகுமார் என்பவர்  வசித்து வருகிறார். இவர்  கோயம்பேடு போக்குவரத்து பிரிவு தலைமையிலான காவலராக வேலை பார்த்து வருகிறார்.  இவரின் பக்கத்து வீட்டில் வசித்து வரும்  முருகன் என்பவர்  காய்கறி வியாபாரம் செய்து வருகின்றார். இவர் தன்னுடைய இரு சக்கர வாகனத்தை அவர் வீட்டின் அருகில் உள்ள சாலையின் ஓரமாக நிறுத்துவதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.  இதன் காரணமாக முருகனுக்கும் கிருஷ்ண குமாருக்கும் அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு  வந்துள்ளது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் கிருஷ்ணகுமார் மதுபோதையில் வந்துள்ளார்.  அப்போது  முருகனிடம் இரு சக்கர வாகனத்தை நிறுத்த கூடாது என்று கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.  அதனால்  இருவருக்கும் இடையே  வாக்குவாதம் முற்றியது  .  அதன்  காரணமாக கிருஷ்ணகுமார் முருகனின் இருசக்கர வாகனத்தை எட்டி உதைத்தார்.  ‌ வாகனம் கீழே விழுந்தது மேலும் அவர் முருகனை ஆபாசமாக பேசியதோடு மட்டுமல்லாமல் அடிக்கவும் சென்றுள்ளார்.

இதனை பொறுத்து கொண்டு  முருகன் அவருடைய கடைக்கு சென்றுவிட்டார். இருந்தாலும்.  ஆத்திரம் அடங்காததால்  கிருஷ்ணகுமார் முருகன் வீட்டிற்கு அருகே சென்று குடிபோதையில் முருகனின் குடும்பத்தினருடன் தகராறு செய்துள்ளார்.   ஆனால் அவர் அங்கிருந்து போகாமல் தொடர்ந்து கோபமாக பேசிய படி தன்னுடைய கால் சட்டையை கழற்றி நிர்வாணமாக தெருவில் நின்றுள்ளார்.  அதுமட்டுமல்லாமல் அங்குள்ள  பெண்களிடம் ஆணுறுப்பை காட்டியுள்ளார்.

காவலரின் இந்த அருவருப்பான செயலை பார்த்த அக்கம்பக்கத்து பெண்கள் அனைவரும் அலறிஅடித்து கொண்டு வீட்டிற்குள் ஓடினார்கள்.  இதைப்பற்றி முருகன் அம்பத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.  ஆனால்  காவல்துறையினர்  எந்த நடவடிக்கையும் எடுக்காததால்  அம்பத்தூரில் உள்ள மேற்கு மண்டல இணை கமிஷனர் அலுவலகத்திற்கு சென்று முருகன்  புகார் அளித்தார் .

அந்த புகாரை பெற்றுக் கொண்ட காவல்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கபடும் என்று உறுதி  அளித்துள்ளார். மேலும் போக்குவரத்து காவல்துறை அதிகாரி  கிருஷ்ணகுமார் குடிபோதையில் செய்துள்ள அட்டகாசங்கள் அனைத்தும் வீடியோவாக சமூக வலைத்தளங்களில்  வைரலாக  பரவியுள்ளது . பொதுமக்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டிய காவல்துறையினர் குடிபோதையில் ஆபாசமாக பேசிய மட்டுமல்லாமல் தன்னுடைய  அந்தரங்கத்தையும் காட்டியுள்ளார். அதனால் இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |