மாணவி லாவண்யா மரணத்தின் மூலம் தமிழகத்தில் அமைதியை குலைக்க பாரதிய ஜனதா முயற்சி செய்வதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் செயலாளர் கூறியுள்ளார்.
லாவண்யாவின் மரணத்தில் பாஜகவினர் மனமாற்ற சாயம் பூசுவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் பாலகிருஷ்ணன் கூறியுள்ளார் இது குறித்து அவர் தனது பேட்டியில் கூறியிருப்பதாவது, தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் தாலுக்கா தூய இருதய மேரி பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வரும் மாணவி கடந்த சில நாட்களுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்டார். தொடர்ந்து அவருடைய பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் விசாரணை நடத்திய போலீசார் விடுதியில் மாணவிக்கு கொடுக்கப்பட்ட மன உளைச்சலால் அந்த மாணவி தற்கொலை செய்து கொண்டதாக கூறினர். முன்னதாக அந்த மாணவி சிகிச்சை பெற்று வரும் போது போலீசார் அந்த மாணவியிடம் வாக்குமூலம் பெற்றனர் அப்போது மாணவிக்கு கொடுக்கப்பட்ட மன உளைச்சல் மற்றும் தொந்தரவுகள் காரணமாகத்தான் தற்கொலை செய்து கொள்வதாக அந்த மாணவி கூறியிருந்தார்.
இதனிடையே பாஜகா கட்டாய மதமாற்ற நிர்பந்தம் செய்ததால் தான் அந்த மாணவி தற்கொலை செய்துகொண்டார் என ஒரு வீடியோ ஒன்றை பொய்யாக உருவாக்கி வெளியிட்டுள்ளது. இது முற்றிலும் உண்மைக்கு புறம்பானது தமிழகத்தில் அமைதியை குலைக்க பாஜக இது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. மேலும் ஒரு அப்பாவி பள்ளி மாணவியின் சாவில் இவ்வாறு மதமாற்ற சாயம் பூசுவது கண்டனத்திற்குரியது ஆகும். அந்த மாணவியின் மரணத்திற்கு காரணமானவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுத்து அந்த மாணவிக்கு நீதி கிடைக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.” என அவர் கூறியுள்ளார்.