நடிகை சமந்தாவும் தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவும் காதலித்து திருமணம் செய்து கொண்டு அதன் பின்னர் விவாகரத்து பெற்றுள்ளனர். அவர்கள் பிரிவிற்கான காரணத்தை இதுவரை வெளியிடவில்லை. இந்த நிலையில் இருவரையும் மீண்டும் ஒன்று சேர்க்க பல முயற்சிகள் நடைபெற்ற வெற்றி பெறவில்லை. சமந்தாவிற்கும் நாகசைதானியாவிற்கும் இதுவரை நேரடி கருத்து மோதல் எதுவும் ஏற்படவில்லை. பிரிந்து இருந்தாலும் அவரவர் பணிகளில் தீவிரமாக இருந்து வந்தனர். இதற்கு இடையே சமந்தாவின் தந்தை தனது சமூக வலைதள பக்கத்தில் உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில் நீண்ட காலத்திற்கு முன்பு ஒரு கதை இருந்தது. மேலும் அது இனி இருக்காது அதனால் ஒரு புதிய கதை மற்றும் புதிய அத்தியாயத்தை தொடங்குவோம் என குறிப்பிட்டு இருக்கிறார். இத்துடன் சமந்தா நாகசைதன்யா திருமணம் உள்ளிட்ட சில புகைப்படங்களை பகிர்ந்து இருக்கின்றார் இவரது பதிவிற்கு பலரும் ஆறுதல் தெரிவித்து கமெண்ட் செய்து வருகின்றார்கள்.
Categories
“ஒரு புதிய கதை மற்றும் புதிய அத்தியாயத்தை தொடங்குவோம்”.. நடிகை சமந்தா தந்தை உருக்கமான பதிவு…!!!!!
