தமிழ் சினிமாவில் தனது முதல் படத்திலேயே பல நடிகைகள் ரசிகர்கள் மனதை கொள்ளையடித்து பின்னர் பட வாய்ப்பு கிடைக்காமல் விலகி சென்று உள்ளனர். அவர்களில் சிலரை பற்றி இதில் பார்ப்போம்.
தல அஜித் படத்தில் நடித்தவர் பிரியா கில். இந்த படத்தில் ‘ஒல்லிக்குச்சி உடம்புக்காரி’ பாடல் அனைவருக்கும் மிகவும் பிடித்தது. அந்த பாடல் மூலம் அனைவரையும் கவர்ந்தார். இருப்பினும் அந்த படத்திற்கு பிறகு அவருக்கு எந்த படவாய்ப்புகளும் கிடைக்காததால் திரையுலகில் இருந்து அப்படியே விலகிவிட்டார்.
அதேபோன்று அஜித்தின் மற்றொரு படமான மன்னன் படத்தில் நடித்தவர் மானு. இந்தப் படத்தில் ‘உன்னை பார்த்த பின்பு தான்’ என்ற பாடல் மூலம் இளைஞர்களின் மனதை கொள்ளை கொண்டவர். இந்த படத்தை அடுத்து வேறு பட வாய்ப்புகள் கிடைக்காததால் திரையுலகை விட்டு வெளியே சென்றார்.
தளபதி விஜயுடன் மின்சார கண்ணா படத்தில் நடித்த குஷ்புவிற்கு தங்கையாக நடித்தவர் நடிகை மோனிகா. இவரின் நடிப்பு பல ரசிகர்களையும் கவர்ந்தது. இவருக்கும் அடுத்த பட வாய்ப்பு கிடைக்கவில்லை.
நடிகர் பிரசாத்துக்கு ஜோடியாக அறிமுகமானவர் ரிங்கி கன்னா. இந்த படத்தின் மூலம் பிரபலமான இவர் அடுத்த பட வாய்ப்புகள் வராததால் தமிழ் திரையுலகை விட்டு நீங்கினார்.
தமிழ் சினிமாவில் வெளியாகி அனைவராலும் பேசப்பட்ட படம் என்றால் அது தாஜ்மஹால். இதில் கனவுக்கன்னியாக ரசிகர்களின் மனதை கொள்ளையடித்த ரியா சென் இந்த படத்திற்கு பின்பு அவருக்கு தமிழில் எந்த பட வாய்ப்புகளும் கிடைக்கவில்லை.