Categories
உலக செய்திகள்

ஒரு நொடி ஏற்பட்ட சபலம்.. வழக்கறிஞர் வாழ்க்கையே தலைகீழான சம்பவம்..!!

வழக்கறிஞர் ஒருவர் பெண்ணிடம் மயங்கியதால் திரைப்படம் போல பல துன்பங்களுக்கு ஆளாகியுள்ளார். 

Birmingham ல் வசிக்கும் இக்பால் முகமது(38). சிறந்த வழக்கறிஞரான இவர் மக்களுக்கு ஆலோசனை வழங்குவதில் வல்லவர் ஆவார். இதனால் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு பிரபலமானார். இந்நிலையில் அவருக்கு அனிஷா அகமது(33) என்ற பெண்  மின்னஞ்சல் ஒன்றை அனுப்பியுள்ளார்.

ஆனால் இக்பால் அதனை கண்டு எரிச்சலடைந்து பதிலளிக்காமல் விட்டுள்ளார். அதனையடுத்து சுமார் 3 ஆண்டுகளுக்குப் பிறகு அந்தப் பெண் மீண்டும் இக்பாலுக்கு மின்னஞ்சல் ஒன்றை அனுப்பியிருக்கிறார். அதில் கவர்ச்சிகரமான புகைப்படம் இருந்ததைக்கண்ட இக்பால் மயங்கியுள்ளார்.  இதனால் அந்தப்பெண் அழைத்தது போல் காபி ஷாப்பிற்கு சென்றுள்ளார்.

அதன்பின்பு அவரது அழகில் மயங்கி தான் ஏற்கனவே வேறு பெண்ணுடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டவன் என்பதை இக்பால் மறைத்து விட்டார். இதனைத்தொடர்ந்து அவர்கள் 9 மாதங்கள் பழகியிருக்கிறார்கள். அந்த சமயத்தில் இணையதளம் மூலமாக இக்பால் ஏற்கனவே திருமணமானதை அனிஷா அறிந்துள்ளார். இதனால் அவர் ஆத்திரம் அடைந்திருக்கிறார்.

அப்போது இக்பால் நாம் இனிமேல் பழக வேண்டாம் என்று கூறியுள்ளார். இதனால் அவரை பழிவாங்க முடிவெடுத்த அனிஷா இக்பாலுடைய மனைவி, குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் சக பணியாளர்கள் என்று மொத்த பேருக்கும் தன்னிடம் பழகி இக்பால் ஏமாற்றியதாக குறுஞ்செய்திகள் அனுப்பி இருக்கிறார்.

மேலும் அனிஷா தன் முன்னாள் காதலரின் உதவியுடன் இக்பால் பெயரில் போலியான மின்னஞ்சலை உருவாக்கி, அந்தரங்க புகைப்படங்களை வெளியிட்டு விடுவேன் என்று மிரட்டியதாக அனைவரையும் நம்ப வைத்துள்ளார். இக்பாலால் இதனை நிரூபிக்க முடியவில்லை. மேலும் அனிஷா இக்பால் தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாக புகார் அளித்துள்ளார்.

இதனால் அவர் வழக்கறிஞர் அலுவலகத்தில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். இது மட்டுமல்லாமல் தன் முன்னால் காதலரிடம் கூறி தன்னை கத்தியால் தாக்குமாறு அனிஷா கூறியுள்ளார். ஆனால் அவர் அனிஷா இறந்து விடுவாரோ என்று பயந்து அதனை மறுத்திருக்கிறார்.

இதனால் அனிஷா அவராகவே தொடையில் கத்தியால் குத்திவிட்டு இக்பால் தான் தன்னை குத்தியதாக கூறியுள்ளார். இவை அனைத்தும் தெரியவந்த பிறகு அனுஷாவிற்கு குறைந்தபட்சம் நான்கு வருடங்கள் மற்றும் ஆறு மாதங்கள் வரை அவர் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.  மேலும் அவரின் முன்னாள் காதலனுக்கு 2 வருடங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது.

இதனிடையே இக்பாலின் மனைவி அவரை பிரிந்து விட்டார். திருமண வாழ்கை மற்றும் வழக்கறிஞர் பணியிலும் பிரச்சனை ஏற்பட்டதால் இக்பால் மனமுடைந்து போனார். இந்நிலையில் இக்பாலின் மனைவி ஒரு பெண்ணால் தான் இவ்வளவும் நேர்ந்தது என்பதை புரிந்துகொண்டு அவரை மன்னித்து ஏற்றுக்கொண்டுள்ளார்.

இதனால் இக்பால் தன் வாழ்நாள் முழுவதும் மனைவியுடைய அன்பிற்கு கடமைப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளார். ஆனால் அனிஷா சிறையிலிருந்து விடுதலையானால் என்ன செய்யப் போகிறாரோ? என்ற பயமும் தனக்கு இருப்பதாக கூறியுள்ளார். மேலும் எந்த காரணத்திற்காகவும் சபலத்தில் மயங்காதீர்கள் என்று கூறியுள்ளார்.

Categories

Tech |