நடிகர் வடிவேலு டிடெக்டிவ் நேசமணி என்ற படத்தின் மூலம் சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுக்க இருப்பதாக தகவல் பரவி வருகிறது.
தமிழ் திரையுலகில் முன்னணி காமெடி நடிகராக வலம் வந்தவர் வடிவேலு. இம்சை அரசன் 24-ஆம் புலிகேசி படத்தில் நடிக்க மறுத்ததால் இவரை புதிய படங்களில் நடிக்க ஒப்பந்தம் செய்ய தயாரிப்பாளர் சங்கம் தடை விதித்தது . இதனால் நடிகர் வடிவேலு கடந்த சில வருடங்களாக திரைப்படங்களில் நடிக்கவில்லை. தற்போது இவர் சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுக்க தயாராகி வருவதாக கூறப்படுகிறது.
Fake news uhh இருந்தாலும் ஓரு நியாயம் வேண்டாமாப்பா … ஆனா தலைவர் டிசைன்ல சூப்பர்ப்பா … pic.twitter.com/wwtwYvHkar
— C V Kumar (@icvkumar) August 11, 2021
இதனிடையே டிடெக்டிவ் நேசமணி என்ற படத்தில் வடிவேலு நடிக்க இருப்பதாகவும், சி.வி.குமார் தயாரிக்கும் இந்த படத்தை ராம்பாலா இயக்குவதாகவும் குறிப்பிட்டு போஸ்டர் ஒன்று இணையத்தில் பரவி வந்தது. இந்நிலையில் தயாரிப்பாளர் சி.வி.குமார் இதுகுறித்து தனது சமூக வலைதளப் பக்கத்தில் விளக்கமளித்துள்ளார். அதில் ‘போலி செய்தியாக இருந்தாலும் ஒரு நியாயம் வேண்டாமப்பா. ஆனா தலைவர் டிசைன்ல சூப்பர்ப்பா’ என கூறி வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.