ஒரு நாள் ஊரடங்கை கூட தமிழக மக்கள் தாங்க மாட்டார்கள் என புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்தார்.
நேற்று முன்தினம் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி, அக்கட்சியின் தலைமையகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், அரசியல் கட்சிகளும் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு இப்பொழுது ஒட்டுமொத்தமாக தமிழகத்தில் மீண்டும் ஒரு மிகப்பெரிய அளவுக்கு கொரோனா பரவக்கூடிய அபாயம் நிலவி இருக்கிறது. ஆனால் தமிழ்நாடு இன்னொரு முழு அடைப்பை சந்திக்கக் கூடிய நிலையில் இல்லை.
எனவே தமிழ்நாடு அரசு எந்த காரணத்தை கொண்டும் முழு அடைப்பு என்ற சிந்தனைக்கு வரக்கூடாது என்பதுதான் என்னுடைய மிக முக்கியமான வேண்டுகோள் என தெரிவித்தார். அதற்கு மாறாக அனைவருக்கும் தடுப்பு ஊசிகள் போடுவது, எல்லோருமே பொது இடங்களில் பணியாற்றக்கூடிய அனைத்து இடங்களிலும் முக கவசம் அணிய வைப்பது, சனிடைசர் கொடுப்பது, ஆர்.டி.பி.சி.ஆர் டெஸ்டுகள் பண்ணுவது என்பதை தான் கடைப்பிடிக்க வேண்டுமே தவிர,
முழு அடைப்பு பாதி அடைப்பு என்ற நிலைக்கு வந்து தமிழ்நாடு அரசு எந்த சூழ்நிலையிலும் அதை கையாளக் கூடாது என்பதுதான் நான் சொல்லக்கூடிய கருத்தாகும். ஏனென்று சொன்னால், ஏற்கனவே மிகப்பெரிய அளவுக்கு எல்லா நிறுவனங்களும் பாதிக்கப்பட்டது. தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள், விவசாயம், மருத்துவமனைகள், வழக்கறிஞர்கள், என்று பாதிக்காத எந்த துறையும் கிடையாது. எனவே அதில் மாநில அரசு தெளிவாக இருக்க வேண்டும்.
எனவே தடுப்பூசி போடுவதை துரிதப்படுத்த வேண்டும். அனைவருக்கும் பொது இடங்களில் சுகாதாரத்தின் மூலமாக முகக்கவசம் அணிய, இலவசமாக முக கவசம் கொடுக்க வேண்டும். அதுபோல சனிடைசர் எல்லா இடத்திலும் வைக்க வேண்டும். இதுதான் தமிழ்நாடு அரசு செய்ய வேண்டும். இதுதான் என்னுடைய வேண்டுகோள் என புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்தார்.