Categories
மாநில செய்திகள்

ஒரு தேர்வு எழுதினால் போதும்….. +1 டூ Ph.D வரை உதவித்தொகை….. மாணவர்களுக்கு அரிய வாய்ப்பு….!!!!

தேசிய திறன் தேடல் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றால் பிஹெச்டி வரையில் உதவி தொகை கிடைக்கும்.

நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் மாணவர்கள் இடையில் பள்ளி படிப்பை நிறுத்தி விடாமல் உயர்கல்வி கற்க உதவியாக இருக்கவும், மேல்நிலை கல்வி தடைபடக் கூடாது என்ற நோக்கில் மத்திய அரசு சார்பில் ஒவ்வொரு ஆண்டும் தேசிய திறனாய்வு தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டு வருகின்றது. தமிழகத்தில் பள்ளிக் கல்வித் துறை சார்பில் ஒவ்வொரு ஆண்டும் தேசிய திறனாய்வு தேர்வு நடத்தப்பட்டு அதில் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகின்றது.

பத்தாம் வகுப்பு படித்தவர்கள் இந்த தேர்வை எழுதலாம். ஒன்பதாம் வகுப்பில் 60 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். பெற்றோர்கள் ஆண்டு வருமானம் 8 லட்சத்திற்கு குறைவாக இருந்தால் இந்த தேர்வுக்கு பள்ளிக்கூடம் வழியாக விண்ணப்பிக்க முடியும். இதில் தேர்ச்சி பெற்றால் பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வில் 1,250 ரூபாய் கிடைக்கும். அதைத்தொடர்ந்து யுஜி படிப்புக்கு 2 ஆயிரம் என்று படிப்புக்கு ஏற்றபடி உதவி தொகை அதிகரிக்கும். அப்படி நாம் பிஹெச்டி வரையில் உதவித்தொகை பெறலாம்.

Categories

Tech |