ஒரு நபர் சிக்கனை ஆர்டர் செய்து அதனை வைத்து 75 லட்சம் ரூபாய் சம்பாதித்துள்ளார் என்று கூறினால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆனால் அதுதான் உண்மை. அதைப்பற்றி இந்த தொகுப்பில் நாம் தெரிந்து கொள்வோம்.
அமெரிக்காவை சேர்ந்த ஒரு நபர் ஒருநாள் சாதாரணமாக மெக்டொனால்ட்ஸ்லிருந்து சிக்கன் நகெட் ஆர்டர் செய்கிறார். அதைத்தொடர்ந்து அந்த சிக்கன் நகெட் அவருக்கு டெலிவரி செய்யப்பட்டது. அதை திறந்து பார்த்த அந்த நபர் மிகவும் ஆச்சரியமடைந்தார். ஏனெனில் அதில் இருந்த ஒரு சிக்கன் நகெட் பார்ப்பதற்கு மிகவும் பிரபலமான ஆமாங்கஸ் கேமின் கேரக்டர் போல் இருந்துள்ளது. இதைத்தொடர்ந்து அந்த நபர் அந்த சிக்கன் நகெட்டை சாப்பிடாமல் அதனை விற்பனை செய்வதற்கு முடிவு செய்துள்ளார்.
அவர் அந்த சிக்கன் நகெட்டை இணையதள பக்கத்தில் பகிர்ந்து இருந்துள்ளார். இதைப்பார்த்த ஆமாங்கஸ் கேமின் ரசிகர்கள் அதை வாங்குவதற்கு போட்டி போட்டுள்ளனர். பின்னர் அந்த நபர் யாருக்கெல்லாம் இதை வாங்க வேண்டும் என்று விருப்பம் உள்ளதோ அவர்கள் அனைவரும் ஏலம் கேட்கலாம் என்று கூற அனைவரும் போட்டி போட்டு கொண்டு அதனை ஏலத்தில் எடுக்க முயற்சி செய்தார்கள். கடைசியில் அந்த சிக்கன் நகெட் 75 லட்சம் ரூபாய்க்கு ஏலம் போயுள்ளது. இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் மிகவும் வைரலானது.