நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை அதி தீவிரமாக பரவி வருகிறது. பெரும்பாலான மாநிலங்களில் கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை தொட்டுள்ளது. அதனை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில் ஒடிசா மாநிலம் கட்டாக் அருகே உள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிராமங்களில் இதுவரை கொரோனா இரண்டாம் அலையின் பாதிப்பு பதிவாகவில்லை. சுமார் 1028 கிராமங்களில் இதுவரை ஒரு கொரோனா பாதிப்பு கூட பதிவாகாததால் மாவட்ட நிர்வாகம் பச்சை மண்டலமாக அறிவித்துள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதிமுறைகள் முறையாக பின்பற்றுவதே இதற்கு காரணம் என மாவட்ட நிர்வாகம் கூறியுள்ளது.
Categories
கொரோனா பாதிக்காத 1000 கிராமங்கள்….. பச்சை மண்டலமாக அறிவிப்பு….!!!!
