ஒரு குடிமகனாக சமூகத்துக்கு முடிந்ததை நான் செய்வேன் என நடிகர் சிவகார்த்திகேயன் தெரிவித்தார்.
தமிழ் சினிமாவின் இளம் நடிகர் சிவகார்த்திகேயன் நேற்று கலைமாமணி விருதை பெற்ற பிறகு செய்தியாளர்களை சந்தித்து பல கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது, இந்த விருது கொடுத்து இன்னும் நல்லா பண்ணனும், இன்னும் நிறைய விஷயங்கள் சாதிக்கணும் என ஊக்குவித்த தமிழக அரசுக்கும் என்னுடைய நன்றி. இன்னும் நிறைய நல்ல படங்கள் பண்ணனும், இன்னும் நல்லா நடிக்கணும் அப்படின்னு ஒரு ரொம்ப பெரிய ஊக்கமாக இருக்கு இந்த தருணம்.
எல்லாத்துக்கும் மேல ரொம்ப முக்கியமாக என்னுடைய அப்பாவிற்கும், என்னுடைய அம்மாக்கும் இந்த தருணத்தில் நன்றி சொல்லி விடுகிறேன். இதற்கு காரணமாக இருந்த அத்தனை பேருக்கும் நன்றி. முதல் முறையா கோட்டைக்குள் வந்துருகேன். செய்தியில் மட்டுமே பார்த்தது, பிரமிப்பாக பார்த்துகிட்டே வந்தேன். புடிச்ச, பிரமாண்டமான இடத்துக்கு குழந்தை போகும்போது என்ன ஒரு மிரட்சியும், சந்தோஷமா இருக்குமோ அது எனக்கும் இருந்துச்சு.
தமிழ்நாட்டுல இருக்கிற ஒரு சாதாரண குடிமகனாய் நிச்சயமா இந்த இடத்த பாக்கணும்ன்னு ஆசை எல்லாருக்குமே இருக்கும். நான் சினிமால பெரிய கதாநாயகனாக மாறுவேன் என்பது எனக்கு ஒரு கனவு மாறி இருக்கு. நான் சினிமாவில் இருக்கனும்ன்னு ஆசைப்பட்டேன். கதாநாயகன் என்ற அந்தஸ்தை கொடுத்து, நிறைய வெற்றி படங்களை கொடுத்து இன்றைக்கு கலைமாமணி என்ற ஒரு மிகப் பெரிய விருது பெற்றுள்ளேன். இதற்க்கு இன்னும் தகுதி படுத்திக்கணும்னு நினைக்கிறேன்.
அடுத்து வரப் போற படம் நல்லா ஓடனும், இன்னும் நல்லா நடிக்கணும்னு நினைக்கின்றேன். இதை தாண்டி ரொம்ப அதிகமாக யோசிக்க வில்லை. நானும் இளம் நடிகர் தான். என்னால் இந்த விருது வாங்க முடித்து என்றால் எல்லா இளம் நடிகர்களால் நிச்சயம் வாங்க முடியும். எனக்கு சரி என்று படுகின்ற பல விஷயங்களுக்கு நிச்சயமாக கருத்து சொல்லி கொண்டு தான் இருப்பேன். சமுதாய பிரச்சனைகள் நிறைய இருக்கு. அதை முடிஞ்ச அளவுக்கு சில படங்களில் சொல்றோம். வேலைக்காரன், கனா போன்ற படங்களில் சொல்கின்றோம். சில நேரங்களில் நேரடியாக சமூக வலைத்தளம் மூலமாக பகிர்ந்துகொள்கிறோம்.
ஒரு குடிமகனா என்னால எந்த தருணத்தில் எல்லாம் முடியுதோ அத நிச்சயமா செய்வேன. அரசியலுக்கு வருவீர்களா ? என்ற கேள்விக்கு என்னை பாத்து அந்த கேள்வி கேட்குறீங்கன்னு ஆச்சரியமா இருக்கு. திரைப்படத்துறையில் இருக்கிற நிறைய பேர் அவர்களுடைய பார்வை , விவசாய சம்பந்தமான பார்வையை பதிவு செய்து கொண்டு இருக்காங்க என நடிகர் சிவகார்தேகேயன் தெரிவித்தார்.