நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா அவருடைய கணவர் தனுஷை பிரிய போவதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு அறிவித்தார். மகளின் விவாகரத்து நடிகர் ரஜினிக்கு கொஞ்சம்கூட பிடிக்கவில்லையாம். குழந்தைகளின் நலனுக்காக இருவரும் சேர்ந்து வாழவேண்டும் என அவர் அடிக்கடி கூறி வருகிறாராம். அதோடு குடும்ப நண்பர்கள் மூலமாக தனுஷ் மற்றும் ஐஸ்வர்யாவை சேர்த்து வைக்கும் முயற்சியில் தீவிரமாக இறங்கி வருகிறாராம் நடிகர் ரஜினிகாந்த்.
இவ்வாறு குடும்ப பிரச்சனை ஒரு பக்கம் இருக்க இதனால் மன நிம்மதியை இழந்த ரஜினிகாந்த் இதில் இருந்து வெளிவருவதற்காக அடுத்த படம் குறித்த ஆலோசனையில் இறங்கி உள்ளாராம். இதற்காக இயக்குனரை தேடும் பணியில் தீவிரமாக இறங்கியுள்ளார் நடிகர் ரஜினிகாந்த். இதனால் ரஜினியின் அடுத்த படத்திற்கான இயக்குனர்கள் பட்டியலில் கார்த்திக் சுப்புராஜ், நெல்சன், வெங்கட் பிரபு என பலரின் பெயர்கள் இடம்பெற்றிருந்தன.
ஒரு வழியாக அலசி ஆராய்ந்து தன்னுடைய அடுத்த படத்திற்கான இயக்குனரை கண்டு பிடித்து விட்டாராம் நடிகர் ரஜினி .இந்நிலையில் தன்னுடைய அடுத்த படத்தை இயக்குனர் பால்கி இயக்கத்தில் நடிக்க முடிவு செய்துள்ளாராம் நடிகர் ரஜினிகாந்த். இந்த தகவலால் ரஜினி ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.