அரசு கலைக்கல்லூரி படிக்கும் மாணவரை 10க்கும் மேற்பட்ட மாணவர்கள் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் கோவிந்தசாமி அரசு கலைக்கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியில் உள்ள மாணவர்களுக்கு இடையே அடிக்கடி சண்டை வருவது வழக்கமாக இருந்துள்ளது. இதனையடுத்து நேற்று கல்லூரியில் படிக்கும் ரோசனை என்ற மாணவரை அதே கல்லூரியில் 10-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தாக்கி உள்ளனர்.
ஒரு மாணவரை 10க்கும் அதிகமான மாணவர்கள் தாக்குவதை பார்த்த அங்கிருந்த யாரோ ஒருவர் வீடியோ எடுத்து அந்த வீடியோவை சமூக வலைத் தளத்தில் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகியதையடுத்து இந்த வீடியோவை சமூக வலைத்தளத்தில் பார்த்த மாணவர்களின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக ரோசனை காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.