பிரேசிலில் கொரோனா கோரத்தாண்டவம் ஆடி வருவதால் சடலங்களை தெருவில் புதைக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.
கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவில் வுகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் தொற்று உலக நாடு முழுவதிலும் பரவி ஏராளமான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் பிரேசிலில் புதிய கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வருவதால் ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்பட்டு மருத்துவர்களும் மருத்துவமனைகளும் பெரும் அழுத்தத்தில் இருக்கும் கடுமையான சூழல் நிலவி வருகிறது. இந்நிலையில் ஒரு நாளில் 3000 க்கும் அதிகமானோர் பலியாவதால் மயானங்களில் இடப் பற்றாக்குறை ஏற்பட்டு தெருக்களில் சடலங்களை புதைக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து கல்லறைத் தோட்டம் நிர்வாகி ஒருவர் கூறுகையில் நாட்டில் அனைத்து கல்லறை தோட்டங்களிலும் இடமில்லை என்றும் தொடர்ந்து சடலங்கள் வருவதால் ஜேசிபி இயந்திரங்கள் உதவியுடன் குழிகள் தோன்றுவதாகவும் ஒரு குழியில் பல சடலங்களை போட்டு நல்லடக்கம் செய்து வருவதாகவும் கூறியுள்ளார். இதனை தொடர்ந்து மேலும் சடலங்கள் தொடந்து வருவதால் கல்லறையில் நல்லடக்கம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால் தெருக்களில் சடலங்களைப் புதைத்து வருகிறோம் எனவும் தெரிவித்துள்ளார்.