Categories
சினிமா தமிழ் சினிமா

‘ஒருத்தனையும் விடாத அடிச்சு தொரத்து’… தனுஷின் ‘கர்ணன்’… மிரட்டலான டீசர் ரிலீஸ்…!!!

நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள கர்ணன் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது .

தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் கர்ணன் . பரியேறும் பெருமாள் பட இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கியுள்ள இந்த படத்தை கலைப்புலி எஸ் தாணு தயாரித்துள்ளார். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார். இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் 3 பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது .

இந்நிலையில் ‘கர்ணன்’ படத்தின் மிரட்டலான டீசர் வெளியாகி இணையத்தை கலக்கி வருகிறது. கோழிக்குஞ்சை தூக்கி சென்ற பருந்திடம் சவால் விடும் பெண் ‘உன் காலை ஒடிக்க ஒருவன் வருவான் பாரு’ எனக் கூறுவதுடன் தொடங்கும் டீஸர்  பரபரப்பான காட்சிகளுடன் ‘ஒருத்தனையும் விடாத அடிச்சு தொரத்து கர்ணா’ என்ற குரல் ஒலிக்கும் போது அட்டகாசமாக குதிரையில் தனுஷ் வரும் காட்சிகளுடன் நிறைவடைகிறது .

Categories

Tech |