Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

“ஒருதலையாக பள்ளி மாணவியை காதலித்து கேலி, கிண்டல்”…. கண்டித்த உறவினர்கள் மீது நாட்டு வெடிகுண்டு வீச முயற்சி செய்த இளைஞர் கைது…!!!

நாட்டு வெடிகுண்டு வீச முயன்ற இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பெரம்பலூர் மாவட்டத்திற்கு அடுத்தியிருக்கும் கவுல்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட குடிசை மாற்று வாரிய குடியிருப்பு அருகே உள்ள மேற்கு மலை அடிவாரப் பகுதியில் வாழ்ந்து வருபவர் ஏழுமலை. இவன் கல் உடைக்கும் தொழிலாளி ஆவார். சேலத்தில் இருந்து கவுல்பாளையத்திற்கு வந்து சில வருடங்களாக வசித்து வருபவர் 24 வயதுடைய தனபால். இவர் மோட்டார் மெக்கானிக் கடையில் வேலை செய்து வருகின்றார். இவர் ஏழுமலையின் உறவுக்கார பள்ளி மாணவியை ஒருதலையாக காதலித்து வருகிறார். மேலும் மாணவியை கேலி கிண்டல் செய்ததால் ஏழுமலை, தனபாலின் உறவினரான செல்வத்திடம் கூறி கண்டித்திருக்கிறார். இதையடுத்து அவர் ஏழுமலையை குச்சியால் தாக்கியதாக சொல்லப்படுகின்றது.

இந்நிலையில் ஏழுமலை மற்றும் அவரது சகோதரர் திருமலை நேற்று மாலை தனபால் வீட்டிற்கு சென்று கண்டித்த போது தனபால் வீட்டில் இருந்த நாட்டு வெடிகளை ஏழுமலை மற்றும் திருமலை மீது விச முயற்சித்துள்ளார். தனபால் மற்றும் நந்தகுமார் அவரை தடுத்தனர். இதையடுத்து இச்சம்பவம் குறித்து பெரம்பலூர் காவல் நிலையத்தில் ஏழுமலை புகார் செய்துள்ளார். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தனபாலை கைது செய்து அவரிடம் இருந்த 23 நாட்டு வெடிகுண்டுகளை பறிமுதல் செய்து விசாரணை செய்து வருகின்றார்கள்.

Categories

Tech |