Categories
சினிமா தமிழ் சினிமா

ஒரிஜினல் ஐடியில் வந்து விமர்சனம் செய்யுங்க… யாருன்னே புரிஞ்சுக்க முடியல… ‘கர்ணன்’ பட நடிகர் டுவீட்…!!!

கர்ணன் பட நடிகர் நட்டி நடராஜன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் தனுஷ் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவான திரைப்படம் கர்ணன். கடந்த ஏப்ரல் 9-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் நடிகர் நட்டி நடராஜன் போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இவரது நடிப்பை பலர் பாராட்டினாலும்  இவரது கதாபாத்திரத்தை சிலர் கடுமையாக விமர்சனம் செய்தனர். இதையடுத்து நடிகர் நட்டி நடராஜன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் ‘கண்ணபிரானா நடிச்சுதான்பா இருக்கேன் . அது வெறும் நடிப்புதான். திட்டாதீங்க முடியல’ என பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில் கர்ணன் படம் வெளியாகி ஒரு சில மாதங்கள் ஆன பின்னரும் தொடர்ந்து சிலர் விமர்சனம் செய்து வருவதால்  நட்டி நடராஜன் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ‘ஒரு படத்துல நடிக்கிறோம். அதை விமர்சிக்க பலருக்கு உரிமை உண்டு. ஆனா ஒரிஜினல் ஐடில வாங்க. பேக் ஐடில வராதீங்க. யாருன்னே புரிஞ்சுக்க முடியல. ஜாஸ்தியா வேற கமெண்ட் பண்ணுறீங்க. தவறான வார்த்தைகள் வேணாங்க’ என பதிவிட்டுள்ளார். தற்போது அவரின் இந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.

Categories

Tech |