ஒமைக்ரான் வைரஸ் பரவலை தொடர்ந்து வெளிநாடுகளில் இருந்து கேரளா வருபவர்கள் 7 நாட்கள் கட்டாயம் தனிமையில் இருக்க வேண்டும் என கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் கூறியுள்ளார்.
தென் ஆப்பிரிக்காவில் உருமாறிய ஒமைக்ரான் வைரஸ் பரவி வருவது உலக நாடுகளை அச்சுறுத்தி உள்ளது. இதனையடுத்து வெளிநாடுகளில் இருந்து இந்தியா வருபவர்களளை தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் வெளிநாடுகளில் இருந்து கேரளாக்கு வருபவர்கள் 7 நாட்கள் கட்டாயம் தனிமையில் இருக்க வேண்டும் என அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ், வெளிநாடுகளில் இருந்து கேரளா வருபவர்களில் 5 வயதுக்குமேல் உள்ள அனைத்து பயணிகளும் 72 மணி நேரத்திற்கு முன்பு ஆர்டிபிசியார் பரிசோதனை நடத்த வேண்டும் என்றார்.
கேரளாவுக்கு வந்த பிறகும் விமான நிலையத்தில் பரிசோதனை நடத்த வேண்டும் எனவும், தொடர்ந்து 7 நாட்கள் தனிமைக்காலம் முடிந்த பின்னரும் மீண்டும் ஆர்டிபிசியார் பரிசோதனை நடத்த வேண்டும் என்றும் கூறினார்.