Categories
தேசிய செய்திகள்

ஒமைக்ரான் பாதிப்பு…. இந்த சிகிச்சை மட்டுமே போதுமானது…. மருத்துவ நிபுணர்கள் தகவல்….!!!!

நாடு முழுவதும் கொரோனா தொற்றால் மக்கள் பல்வேறு பாதிப்புகளை சந்தித்து வந்தனர்.அதன் பின்னர் அரசின் கடுமையான முயற்சியினாலும், மக்கள் தடுப்பூசி மீது செலுத்திய ஆர்வத்தினாலும், கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து இயல்பு நிலைக்கு வந்ததனர். இந்தநிலையில் உரஉருமாறிய கொரோனா தொற்றான ஒமைக்கிறான் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. இந்தநிலையில் கர்நாடகத்தில் கடந்த 2-ஆம் தேதி 2 பேருக்கு மட்டுமே ஒமைக்கிரான் பாதிப்பு ஏற்பட்டது.

ஆனால் தற்போது நாட்டின் 17 மாநிலங்களுக்கும் யூனியன் பிரதேசங்களுக்கும் ஒமைக்ரான் வைரஸ் பரவி விட்டது. பலநூறு பேர் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். மேலும் இதன் பாதிப்பில் நாட்டில் 2-வது இடத்தில் இருக்கிறது. இங்கு ஒமைக்ரான் பாதிப்புக்குள்ளானவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை பற்றி மூத்த மருத்துவர் ஒருவர் பேசியதாவது, டெல்லி விமான நிலையம் வந்திறங்கிய பயணிகளில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் ஏராளமானவர்கள் வெளிநாட்டினர். அவர்களில் பெரும்பாலானவர்கள் 2 டோஸ் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள். நான்கில் 3 பேர் தடுப்பூசி செலுத்தி கொண்டவர்கள்தான்.

மேலும் அவர்களில் 90% மேற்பட்டவர்கள் அறிகுறி இல்லாதவர்கள். மீதமுள்ளவர்கள் தொண்டை வலி லேசான காய்ச்சல், உடல் வலி ஆகியவற்றால் மட்டுமே பாதிக்கப்படுகிறார்கள். இவர்களுக்கு விட்டமின் மாத்திரைகள் மற்றும் காய்ச்சல் சிகிச்சைகான மாத்திரைகளைத் தருகிறோம். அவர்களுக்கு வேறு எந்த மருந்துகளும் தர வேண்டிய தேவை ஏற்படும் என்று நாங்கள் கருதவில்லை என்று அவர் கூறியுள்ளார். மேலும் ஒமைக்ரான் பரவல் அதிகரித்து வரும் சூழ்நிலையில் தினந்தோறும் 1 லட்சம் நோயாளிகளை கையாளுவதற்கு ஏற்ற வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும், தினமும் 3,00,000 சோதனைகள் செய்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் டெல்லி முதல்-மந்திரி கெஜ்ரிவால் கூறியுள்ளார். இதையடுத்து ஒமைக்கிறான் தொற்று வேகமாக பரவினாலும் இது லேசான பாதிப்பை ஏற்படுத்துவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |