பயணத் தடைகள் மூலமாக மட்டும் ஒமைக்ரான் தொற்றுப் பரவலை தடுத்துவிட முடியாது என்று உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஒமைக்ரான் தொற்று பரவுவதால் உலக நாடுகளை சேர்ந்த மக்கள் வருவதை சில நாடுகள் தடை விதித்துள்ள நிலையில் ஒமைக்ரான் பாதிப்புள்ள தென்னாப்பிரிக்கா, சீனா, நியூஸிலாந்து, ஹாங்காங், பிரிட்டன், பிரசில், வங்கதேசம், போட்ஸ்வானா, மோரீஷஸ், ஜிம்பாப்வே, சிங்கப்பூா், இஸ்ரேல் உள்ளிட்ட நாட்டு மக்களுக்கு பயணத் தடைகள் விதிப்பதன் மூலம் ஒமைக்ரான் தொற்று பரவலை தடுத்து நிறுத்திவிட முடியாது என்று உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது.
பயண தடைகள் மூலமாக மக்களின் பொருளாதாரம் பெரும் சுமையாக மாறிவிடும். உலகளாவிய சுகாதார முயற்சிகளை மோசமாக பாதிக்கும் என்று தெரிவித்துள்ளது. மேலும் ஒமைக்ரான் பரவல் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கிறோம் என தெரிவித்துள்ளது.