உலகம் முழுவதும் இன்று கிறிஸ்துமஸ் கொண்டாடி வருகின்ற நிலையில், ஒமைக்ரான் தொற்று பரவல் காரணமாக 1 வாரத்தில் 4,300 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்தியாவில் பாதிப்பு வேகமாக அதிகரித்து வருவதால் மாநில அரசுகள் புதிய கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. உலகம் முழுவதும் இன்று கிறிஸ்துமஸ் கொண்டாடப்படும் நிலையில், பல்வேறு விமான நிறுவனங்களும் கிறிஸ்துமஸ் சிறப்பு விமான சேவையை வருடம்தோறும் இயக்கும். இந்த வருடம் உலக அளவில் 108 க்கும் அதிகமான நாடுகளில் ஒமைக்ரான் வைரஸ் வேகமாக பரவி வருவதால் பயணக் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
மேலும் உலகம் முழுவதும் தொற்று பாதிப்பு லட்சத்தை தாண்டிவிட்டது. இந்த தொற்று பாதித்து இதுவரை 26 பேர் உயிரிழந்துள்ள நிலையில், விமான கண்காணிப்பு இணையதளமான www.FlightAware.com வெளியிட்ட புள்ளி விவரத்தின்படி, உலக அளவில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று மட்டும் குறைந்த பட்சம் 2,314 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும் கிறிஸ்துமஸ் வாரவிடுமுறை இறுதி நாட்களில் செல்வதற்காக இயக்கப்படும் சிறப்பு விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால், இந்த வாரம் மட்டும் 4,300 க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்துள்ளன. நேற்று மட்டும் திட்டமிடப்பட்டிருந்தது 340 விமானங்கள் ரத்தாகியுள்ளன.