நாடு முழுவதும் கொரோனா காரணமாக கடந்த ஆண்டு முழுவதும் தீவிர கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. அதன்பிறகு பாதிப்பு கணிசமாக குறைந்து வந்த நிலையில், அரசு படிப்படியாக ஊரடங்கு தளர்வு அறிவித்து வருகிறது. இதனிடையே உருமாறிய கொரோனா வைரஸ் இந்தியாவில் அதிவேகமாக பரவி வருகிறது. இதனால் அனைத்து மாநில அரசுகளும் பல்வேறு கூடுதல் கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர். பெரும்பாலான மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.மக்களுக்கும் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இதையடுத்து புதுச்சேரியில் கொரோனா தொற்று பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கொரோனா தாக்கத்திற்கேற்ப பள்ளிகள் மூடப்படுவது குறித்து அறிவிக்கப்படும் என அம்மாநில கல்வி துறை அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார். தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை மேலும் உயரும் பட்சத்தில் தமிழகத்தில் 1 முதல் 8-ஆம் வகுப்பு வரை நேரடி வகுப்புகள் ரத்து செய்யப்பட வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.