Categories
மாநில செய்திகள்

ஒமைக்ரான் எதிரொலி…. தமிழகத்தில் ஜனவரி 3 முதல் தினசரி வகுப்புகள் ரத்து?….. கல்வித்துறை அதிகாரி விளக்கம்….!!!!

நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவல் காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டு இருந்தது. இதையடுத்து அரசின் கடுமையான முயற்சியினாலும் மக்கள் தடுப்பூசி மீது செலுத்திய ஆர்வத்தினாலும், தொற்று படிப்படியாக குறைந்து இயல்பு நிலைக்கு மக்கள் திரும்பி வந்தனர். இதையடுத்து பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் உருமாறிய கொரோனா தொற்றான ஒமைக்ரான் மிக வேகமாக பரவி வருகிறது.

இந்த நிலையில் தமிழகத்தில் 1 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அரையாண்டு விடுமுறையாக டிசம்பர் 27-ஆம் தேதி முதல் ஜனவரி 2-ம் தேதி வரை அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்திருந்தது. அத்துடன் ஜனவரி 3-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் போது சுழற்சி முறையில் வகுப்புகள் தொடராமல் முழு நேர வகுப்புகள் நடத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. ஆனால் ஒமைக்ரான் தொற்று அதிகரித்துக்கொண்டே வருகிறது. மேலும் வரும் நாட்களில் இது தொற்று அதிகரித்துக் கொண்டே தான் இருக்கும் என்று நிபுணர்கள் கூறியுள்ளார்கள்.

இதனை கருத்தில் கொண்டு சுழற்சி முறையில் வகுப்புகள் தொடங்க வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை பரிசீலனை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது, இனிவரும் காலங்களில் ஒமைக்ரான் தொற்று அதிகரித்துக்கொண்டே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆதலால் சுழற்சி முறையில் வகுப்புகள் நடத்தப்பட வேண்டும் என்று திட்டமிட்டுள்ளதாக கூறியுள்ளார். மேலும் மருத்துவ நிபுணர்களுடன் கலந்து ஆலோசித்து அதன் பின் முடிவுகள் எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |