தமிழகத்தில் புதிய வகை ஒமைக்ரான் பாதிப்பு தீவிரமடைந்து வருகிறது. ஒமைக்ரான் பாதிப்பு பட்டியலில் தமிழகம் 7-வது இடத்தில் உள்ளது. அதனால் பண்டிகை கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கவும், ஊரடங்கு கட்டுப்பாடுகளை கடுமையாக்க வேண்டும் என்றும், தேவைப்பட்டால் இரவு நேர ஊரடங்கு கூட அமல்படுத்தலாம் என்று மத்திய அரசு மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தியுள்ளது. மற்ற அண்டை மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ள்ளன.
,இந்நிலையில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை நீட்டிப்பது குறித்து, முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். இதனைத் தொடர்ந்து கூடுதல் கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு ஜனவரி 10-ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். மேலும் மக்களின் ஒத்துழைப்பு இருந்ததால் தான் கொரோனா 2-வது அலையில் இருந்து மீண்டு வந்தோம். புத்தாண்டில் மகிழ்ச்சியாக இருப்பதைப் போல் பாதுகாப்பாகவும் மக்கள் இருக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.