Categories
தேசிய செய்திகள்

ஒமிக்ரான் வைரஸ்…. இந்தியாவில் 3-வது அலையா?

ஒமிக்ரான் புதிய வகை வைரஸ் இந்தியாவில் 3-வது அலையை தூண்டலாம் என தேசிய தடுப்பூசி திட்டம் ஆலோசகரும், மருத்துவ நிபுணருமான நரேஷ் போகித் எச்சரித்துள்ளார்.

இது குறித்து பேசிய நரேஷ் போகித், புதிதாக கண்டறியப்பட்டுள்ள ஒமிக்ரான் என பெயரிடப்பட்டுள்ள பி 11529 வைரஸ் தென்னாப்பிரிக்காவில் முதலில் கண்டறியப்பட்டுள்ளது எனவும், தற்போதுவரை ஆல்பா பீட்டா,காமா, டெல்டா என 4 வகை வைரஸ்கள் கவலைக்குரிய வைரஸ்களாக விஞ்ஞானிகளால் அடையாளம் காணப்பட்டுள்ளது எனவும் கூறியுள்ளார்.

தடுப்பூசி திட்டம் முன்னேற்றம் கண்டு வருகிற நிலையில் 3-வது அலையில் இருந்து நோய் எதிர்ப்பு சக்தியை பெற்று இருக்கிறோம் என நினைத்தவர்களுக்கும், நோய் தொற்று ஏற்பட்ட போது அறிகுறி இல்லாமல் இருந்தவர்களுக்கும், இந்த பிரச்சினைகயை ஏற்படுத்தலாம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

புதிய வைரஸை பொருத்தமட்டில், அதன் பரவும் தன்மை தடுப்பூசி செயல் திறன் குறித்து எந்த தெளிவான ஆதாரமும் இல்லை எனவும், அதை பொதுமக்கள் மிகவும் எச்சரிக்கையுடனும் கொரோனா கால விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |