நாடு முழுவதும் கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக முழு ஊரடங்கு அமலில் இருந்தது. அதன் பிறகு கணிசமாக குறைந்து வந்த நிலையில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் தென்னாப்பிரிக்காவில் கொரோனா வைரஸ் ஒமிக்ரன் என்ற புதிய வைரசாக உருவாகி உலக நாடுகளை அதிர வைத்துள்ளது. இதனால் பல்வேறு நாடுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதனை தொடர்ந்து இந்தியாவிலும் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி இந்தியாவுக்கு விமானம் மூலம் வரும் பயணிகளை மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும் உள்ளிட்ட பல விதிமுறைகளை கொண்டு வந்துள்ளது.
அதனைப்போலவே இஸ்ரேலில் ஒமிக்ரான் அச்சத்தின் காரணமாக தனது எல்லையை மூடியுள்ளது. தற்போது இந்த தடை முடிந்த நிலையில் வருகின்ற டிசம்பர் 22ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் தனது நாட்டு மக்களுக்கும் பயண கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி வெளிநாட்டிலிருந்து இஸ்ரேலுக்கு திரும்பும் சொந்த நாட்டு மக்கள் கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும். அது மட்டுமில்லாமல் தங்களை அவர்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். இதுவரை இஸ்ரேலில் 21 பேருக்கு ஒமிக்ரான் வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் கொரோனா தொற்று நேற்று வரை 8210 பேர் உயிரிழந்துள்ளனர்.