அதிமுக பொதுக்குழு கூட்டத்தை ஓபிஎஸ் புறக்கணிப்பார் என்று கூறப்பட்டது. இந்நிலையில் ஓ.பன்னீர்செல்வத்துக்கு இன்று எடப்பாடி பழனிசாமி ஒரு கடிதம் அனுப்பி வைத்துள்ளார். அதில் அதிமுக பொதுக்குழுவில் பங்கேற்க நீங்கள் வர வேண்டும் என கூறியுள்ளார். இதனிடையே அதிமுக செயற்குழு – பொதுக்குழு தீர்மானங்களுக்கு ஓபிஎஸ் ஒப்புதல் அளிக்க மறுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
23 வரைவு தீர்மானங்களை அதிமுக தீர்மானக் குழு தயார் செய்து இருந்தது. 23 தீர்மானங்களின் வரைவு நகல் ஒருங்கிணைப்பாளர் பன்னீர் செல்வத்திடம் நேற்று ஒப்படைக்கப்பட்டது. நண்பகல் 12 மணிக்குள் ஒப்புதல் வழங்க வலியுறுத்திய நிலையில் தற்போது வரை பன்னீர் செல்வம் ஒப்புதல் தரவில்லை. இதனால் 23 வரைவு தீர்மானங்கள் நிறைவேற்றப்படுமா? என்பதும் தெரியவில்லை.