Categories
தேசிய செய்திகள்

ஒப்பந்த ஆசிரியர்களுடன் இணைந்து….  போராட்டம் நடத்திய டெல்லி முதல்-மந்திரி….!!!

டெல்லி மாநிலத்தில் முதல்வராக அரவிந்த் கெஜரிவால் ஆம் ஆத்மி ஆட்சி நடைபெற்று வருகிறது . இந்நிலையில் முதல்வர் அரவிந்த் பஞ்சாப் மாநிலத்தில் இன்று சுற்றுப்பயணம் மேற்கொண்டார். பஞ்சாப் மாநிலத்தில் தற்போது காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. எனவே அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலுக்காக பாஜக மற்றும் ஆம் ஆத்மி உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன.

இந்நிலையில் பஞ்சாப்பின்  மொகாலி நகரில் ஒப்பந்த ஆசிரியர்கள் தங்கள் பணி நடைமுறைகளை ஒழுங்குபடுத்துதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் ஒப்பந்த ஆசிரியர்களுடன் சேர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார்.

 

Categories

Tech |