Categories
Uncategorized உலக செய்திகள்

ஒபரா பேட்டியை நினைத்து இளவரசர் ஹரி வருத்தம் அடைந்துள்ளார்…. அறிவிப்பு வெளியிட்ட அரச குடும்ப நிபுணர்….!!

இளவரசர் ஹரி உகரா ஓபரா பேட்டியை நினைத்து நிச்சயமாக வருத்தப்பட்டு இருப்பார் என அரச குடும்ப நிபுணர் தெரிவித்துள்ளார்.

பிரிட்டன் இளவரசர் ஹரி ஓபரா பேட்டியை எண்ணி வருந்துவதாக அரச குடும்ப நிபுணரான Duncan Larcombe தகவல் வெளியிட்டுள்ளார். அவர் இளவரசர் ஹரி உடனடியாக கோபப்படும் குணம் உடையவர் என்றும் அதன்பின் நடந்ததை எண்ணி வருந்துவார் என தெரிவித்துள்ளார். அதேபோல் பல சம்பவங்கள் நிகழ்ந்துள்ளது என்றும் ஒருமுறை இளவரசர் ஹரி, இளவரசர் வில்லியம் மற்றும் நான் மூன்று பேரும் சேர்ந்து மதுபானம் அருந்தினோம் என்றும் அதில் ஒரு பேச்சில் ஹரி சட்டென கோபம் கொண்டதாகவும் அதன்பின் தன் தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

அதே போல் தான் ஒபேரா பேட்டியில் நடந்துள்ளது என்றும் மேகன் கூறியதை கேட்டு ஹரி கோபம்  கோபம் அடைந்ததால் ஒபரா பேட்டியில் பேசியதாகவும் பின்னர் அதுகுறித்து நிச்சயமாக கவலைப்பட்டு இருப்பார் எனவும் Duncan Larcombe தெரிவித்துள்ளார். மேலும் இளவரசர் ஹரி குடும்பத்திற்கும் மனைவிக்கும் இடையில் தவித்து வருகிறார் என்றும் அவர் மிகவும் கடினமான சூழ்நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கிறார் எனவும் தெரிவித்துள்ளார். இந்நிலையில் ஜூலை மாதம் 1ம் தேதி இளவரசி டயானாவின் சிலை திறப்பு விழாவுக்கு பிரிட்டனுக்கு ஹரி வரும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே இளவரசர் பிலிப்பின் மரணத்திற்கு வந்தபோது அரச குடும்ப உறுப்பினர்கள் அவரிடம் சரியாக பேசாததால் அவர் இரண்டாவது குழந்தையின் பிறப்பை காட்டி வராமல் இருக்க வாய்ப்புள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |