தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட ஒருமுறை பயன்படுத்திய பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தும் வணிக நிறுவனங்கள் மற்றும் அங்காடிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டு தொழில் உரிமம் ரத்து செய்யப்படும் என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. இதுகுறித்து மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகம் முழுவதும் ஒரு முறைப்படுத்தப்பட்ட தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்களைபயன்படுத்த தமிழக அரசு தடை விதித்துள்ளது.
ஒரு முறை பயன்படுத்தப்பட்டு தூக்கி எறியப்படும் பொருட்களான உணவுப் பொருட்களை கட்ட பயன்படுத்துதல் பிளாஸ்டிக் உறை, உணவு அருந்து மேஜைமீது விரிக்கப்படும் பிளாஸ்டிக் கவர், காகித தட்டுகள், பிளாஸ்டிக் தட்டுகள், பிளாஸ்டிக் பைகள் உள்ளிட்ட 16 வகையான பொருட்களுக்கு தடை செய்யப்பட்டுள்ளது. இந்த பிளாஸ்டிக் பொருட்களுக்கு பதிலாக வாழை இலை, பாக்குமர இலை, அலுமினியத்தாள், காகிதச் சுருள், தாமரை இலை ஆகியவற்றை பயன்படுத்தலாம் என்று கூறப்பட்டுள்ளது.