தமிழகத்தில் மீனவர்களின் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண்பதற்கான உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். தமிழக மீனவர்கள் கடலில் மீன் பிடிக்கச் செல்லும் போது எல்லையை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்வதும், அவர்களின் படகுகளை பறிமுதல் செய்வதும், தொடர்ந்து நடந்து வருகிறது.
அதனால் முதல்வர் முக. ஸ்டாலின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது, கடந்த 18 ஆம் தேதி தமிழக மீனவர்களின் மீன்பிடி கப்பலை இலங்கை படையினர் துரத்திய போது கடலில் மூழ்கியது. அதிலிருந்து 2 மீனவர்கள் காப்பாற்றப்பட்ட நிலையில், ஒரு மீனவரை தேடும் பணியானது 18-ம் தேதியிலிருந்து நடந்து வருகிறது.
மீட்கப்பட்ட 2 மீனவர்களுக்கு மறுவாழ்வு அளித்திடவும், காணாமல் போன மீனவரை கண்டுபிடிக்கவும், நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்றும், இந்தப் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வு காணவேண்டும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.