Categories
உலக செய்திகள்

ஒன்னு இல்ல ரெண்டு இல்ல 118 முறை… தாயை கொடூரமாக கொன்ற மகன்…!!

பெற்ற தாயை கொடூரமாக தாக்கி மகன் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை  ஏற்படுத்தியுள்ளது. 

பிரிட்டனில் ஹம்பிள்டன் ஹான்ட்ஸ் என்ற பகுதியைச் சேர்ந்தவர் 17 வயதான ரோவன் தாம்சன். இவரது தாயார் ஜோனா தாம்சன். இவர்கள் இருவரும் கிராமத்தில் உள்ள தங்கள் குடியிருப்பின்  அருகில் நடைபயிற்சி மேற்கொண்டனர்.  அதன் பிறகு வீடு திரும்பிய ஜோனா சுயநினைவற்ற நிலையில் இருந்துள்ளார். இதனையடுத்து சுமார் 15  நிமிடம் கழித்து வீடு திரும்பிய ரோவன் தனது தாயின் தலையில் கத்தியால் 38 முறை குத்தியுள்ளான். மேலும் கையில் 16 முறை மற்றும் கழுத்துப் பகுதிகளில் அறுபத்தி நான்கு முறையும் தாக்கிவிட்டு அவனே காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

மேலும் பிணப்பை ஒன்றை எடுத்து வரும்மாறும்   கூறியுள்ளான். இதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற காவல்துறையினர் ரோவனை கைது செய்தனர். இதுகுறித்து காவல்துறையினர் கூரும்போது, தன் தாயை கொன்ற குற்ற உணர்வு சிறிதும் ரோவனிடம் இல்லை மேலும்  தான் வளர்த்து வந்த பூனையைப்  பற்றி விசாரித்ததாகவும் கூறியுள்ளனர். மேலும் தன் தாய் தன் மேல் அதிக அன்பு காட்டியது, தன்னை கட்டுப்படுத்துவதாக தவறாக புரிந்து இருக்கலாம் என்று மருத்துவர்கள் கூறினர். மேலும் மன அழுத்தம் காரணமாக உளவியல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ரோவன், அங்கிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |