பிரதமரின் பயணம் குறித்து முன்கூட்டியே அறிவிக்கும் பஞ்சாப் அரசு கவனக்குறைவாக செயல்பட்டுள்ளது என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியதாவது, “தமிழகத்தில் நீட் தேர்வின் முக்கியத்துவம் குறித்து அனைத்து கட்சி கூட்டத்தில் பாஜக தலைவர் வானதி ஸ்ரீனிவாசன் கூறுவார். நீட் தேர்வு மாணவர்களுக்கு மிகவும் முக்கியம் சாதாரண ஏழை மாணவன் கூட மருத்துவர் ஆக்குவது நீட் தேர்வு தான்., திமுக எம்பி டி.ஆர் பாலு தமிழக ஆளுநரை பதவி விலக வேண்டும் என கூறியது மிகவும் கண்டனத்துக்குரியதாகும். பஞ்சாபில் பிரதமரின் பயணம் குறித்து முன்கூட்டியே அறிவித்து பஞ்சாப் அரசு ஒழுங்கான முறையில் பாதுகாப்பு அளிக்கவில்லை. இதற்கு பஞ்சாப் அரசின் கவனக்குறைவே காரணம் இவ்வாறு அவர் கூறினார்.