முன்னாள் அமைச்சர் கே.பி அன்பழகன் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் திடீர் சோதனை நடத்தி வருகின்றனர்.
கடந்த அதிமுக ஆட்சியில் உயர்கல்வித் துறை அமைச்சராக இருந்தவர் கே.பி அன்பழகன். இவருடைய வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் திடீர் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த சோதனை கேபி அன்பழகனுக்கு சொந்தமான பல்வேறு இடங்களில் நடத்தப்பட்டு வருகிறது. சுமாராக 57 ஒழிப்பு துறை அதிகாரிகள் இந்த சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர் .குறிப்பாக தர்மபுரி தெலுங்கானா ஆகிய இடங்களிலும் லஞ்ச ஒழிப்பு துறையினர் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். கே.பி அன்பழகனின் சொந்த மாவட்டமான தருமபுரியில் சுமார் 41 இடங்களில் சோதனை நடத்தப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த சோதனையில் வருமானத்திற்கு அதிகமாக11.57 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக கூறி அன்பழகனின் மனைவி மல்லிகா மற்றும் மகன்கள் சசிமோகன், சந்திரமோகன் மருமகள் வைஷ்ணவி ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே இதற்கு முன்னர் முன்னாள் அமைச்சர்கள் கே. பி வேலுமணி தங்கமணி, கே.சி வீரமணி, எம்.ஆர் விஜயபாஸ்கர்,சி.விஜயபாஸ்கர் ஆகியோர் வீடுகளை தொடர்ந்து தற்போது கேபி அன்பழகன் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.