டெல்லியில் புதியதாக திமுக அலுவலகம் அமைக்க காங்கிரஸ் கட்சி சார்பில் இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அந்த இடத்தில் தற்போது திமுக அலுவலகம் அமைக்கப்பட்டு அதற்கு அண்ணா அறிவாலயம் என பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த அலுவலகத்திற்கு ஏப்ரல் 2ஆம் தேதி திறப்பு விழா நடத்த திமுக சார்பில் திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்தத் திறப்பு விழாவுக்காக ஏப்ரல் 2ஆம் தேதி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் டெல்லி வருகை புரிய உள்ளார். தொடர்ந்து ஏப்ரல் 2ஆம் தேதி மாலை அலுவலகம் திறக்கப்பட உள்ளது.
இதனையடுத்து அவர் அன்று இரவு தனி விமானம் மூலம் சென்னை திரும்ப திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில் திமுக தலைவர் டி.ஆர்.பாலு தலைமையில் இந்த விழாவுக்கான அழைப்பிதழை சோனியா காந்தியிடம் கொடுக்க திமுக நிர்வாகிகள் மற்றும் தலைவர்கள் பலர் சோனியா காந்தியை நேரில் சந்திக்க சென்றதாக கூறப்படுகிறது. அப்போது திமுக தலைவர்கள் அவசர அவசரமாக ஓடி சென்று சோனியா காந்தியை சந்திக்க முற்பட்டதாகவும் அதனை தொலைவிலிருந்து கண்ட சோனியா அவசரம் தேவையில்லை பொறுமையாக வாருங்கள் என கையசைத்து மெதுவாக வரச் சொன்னதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து திமுக தலைவர்கள் குழு சோனியா காந்தியிடம் திறப்புவிழா அழைப்பிதழ் கொடுத்து வந்தனராம்..