Categories
உலக செய்திகள்

ஒசாமா பின்லேடன் குடும்பத்திடம் நிதி உதவி பெற்றாரா இளவரசர்?….. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!

ஒசாமா பின்லேடன் குடும்பத்திடம் இருந்து பிரித்தானிய இளவரசர் சார்லஸ் நிதியுதவி பெற்றுள்ளார் என்று தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்து சர்வதேச பத்திரிக்கை ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில், ஒசாமாவின் உறவினர் சகோதரருமான ஷபிக் பின்லேனிடமிருந்து கடந்த 2013 ஆம் ஆண்டு ஒரு மில்லியன் அமெரிக்க டாலர் நிதி உதவி பெற்றதாக குறிப்பிட்டுள்ளது. ஆனால் இந்த தொகை பிரின்ஸ் ஆஃப் வேல்ஸ் அறக்கட்டளைக்கு சென்றதால், தனிப்பட்ட கணக்குகளுக்காக பயன்படுத்தப்படவில்லை என்று கூறப்படுகிறது.

அதனைத் தொடர்ந்து பின்லேடன் குடும்பத்தினரிடம் இருந்து பெருந்தொகை நன்கொடையாக பெறுவது அரச குடும்பத்திற்கு சிக்கலை ஏற்படுத்தும் என்று அப்போது அரண்மனை அதிகாரிகள் தரப்பு எச்சரித்ததாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் தற்போது பேச்சு பொருளாகியுள்ள நிலையில் இதுவரை இளவரசர் சார்லஸ் தரப்பில் இருந்து எந்த ஒரு அறிக்கையும் வெளியிடப்படவில்லை.

Categories

Tech |