Categories
தேசிய செய்திகள்

“ஐ லவ் யூ” சொன்னால்…. பாலியல் தொல்லை ஆகாது…. அதிரடி அறிவிப்பு…!!!

‘ஐ லவ் யூ’ எனக்கூறுவது பாலியல் தொல்லை ஆகாது என மும்பை சிறப்பு கோர்ட் விசாரணையில் வெளியிட்டுள்ளது.

மும்பை மாநகரில் 22 வயதுடைய  வாலிபர் ஒருவர், 17 வயதுடைய சிறுமியிடம் பின் தொடர்ந்து சென்று ‘ஐ லவ் யூ’ என்று கூறி, தன்னுடைய காதலை வெளிப்படுத்தி உள்ளார். இதனால் அந்த இளைஞர் மீது சிறுமியும் அவரது தாயாரும் போலீஸ் நிலையத்துக்கு சென்று புகார் ஒன்றை அளித்துள்ளனர். இதனை அடுத்துஅந்த இளைஞர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் இரு பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கு தொடர்பான விசாரணை மும்பை சிறப்பு கோர்ட் நீதிபதி கல்பனா பாட்டீல் அவர்களது தலைமையில் விசாரணைக்கு வந்தது.

இந்த விசாரணையில் நீதிபதி கூறியதாவது, ஒரு சந்தர்ப்பத்தில் ஒருவர் மற்றவரிடம்  ‘ஐ லவ் யூ ‘ என்று கூறுவது தன்னுடைய உணர்வுகளை நாகரீகமான முறையில் வெளிப்படுத்துவது ஆகும். அந்த வகையில் உள்நோக்கத்துடன் மற்றும் பாதிக்கப்பட்டவருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில், அவர் பின்னாலே தொடர்ந்து சென்று அவ்வாறு கூறுவது தான் சட்டப்படி குற்றம் என்று கூறியுள்ளார்.எனவே குற்றம் சாட்டப்பட்டவர் சிறுமியின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையிலோ அல்லது பாலியல் உள்நோக்கத்துடன் இதனை செய்துள்ளார் என்பதை நிரூபிக்கவில்லை. அதனால் குற்றம் சாட்டப்பட்ட இளைஞரை விடுதலை செய்யுமாறு உத்தரவிட்டார்.

Categories

Tech |