Categories
உலக செய்திகள்

ஐ.நா சபையின் அகதிகள் தலைவர்…. உக்ரைனுக்கு திடீர் பயணம்…. வெளியான முக்கிய தகவல்…!!!

பிரபல நாட்டிற்கு ஐ.நா சபையின் அகதிகள் தலைவர் பயணம் மேற்கொண்டுள்ளார்.

ஐ.நா சபையின் அகதிகள் தலைவராக ஃபிலிப்போ கிராண்டி இருக்கிறார். இவர் உக்ரைன் நாட்டிற்கு பயணம் மேற்கொண்டுள்ளார். இந்த பயணத்தின் போது உக்ரைன் நாட்டில் உள்ள புச்சா மற்றும் இர்பின் நகரங்களை ஆய்வு செய்தார். இதனை அடுத்து ஃப்லிப்போ கிராண்டி செய்தியாளர்களுக்கு பேட்டி கொடுத்துள்ளார்.

அதில் உக்ரைன் நாட்டில் உள்ள ஏராளமான வீடுகளை ரஷ்ய படையினர் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இதன் காரணமாக உக்ரைன் மிகப்பெரிய சிக்கலில் இருக்கிறது. அதன் பிறகு ரஷ்யா மற்றும் உக்ரைன் போரின் காரணமாக உலக அளவில் உணவு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. மேலும் பல நாடுகளில் பணவீக்கம் மற்றும் பொருளாதார பாதிப்பு போன்ற பல்வேறு சிக்கல்கள் எழுந்துள்ளது என்றார்.

Categories

Tech |