Categories
உலக செய்திகள்

ஐ.டி நிறுவன ஊழியர்களே… வாரத்துல 4 நாள் போதும்… நடைமுறைக்கு வரும் புதிய திட்டம்..!!

ஐ.டி நிறுவன ஊழியர்கள் வாரத்தில் நான்கு நாட்கள் வேலை பார்த்தால் போதும் என்றும், மூன்று நாட்கள் விடுமுறை என்ற புதிய திட்டம் நடைமுறைப்படுத்த உள்ளது.

பெரும்பாலான ஐ.டி நிறுவனங்கள் தங்கள் பணியாளர்களுக்கு வாரம் ஒரு நாள் விடுமுறை வழங்குகிறது. சில நிறுவனங்கள் வாரம் இரண்டு நாட்கள் விடுமுறை வழங்குகிறது. ஆனால் யூனிலீவர் என்னும் பன்னாட்டு நிறுவனம், நியூசிலாந்தில் ஐ.டி நிறுவனத்தில் தங்களது பணியாளர்களுக்கு வாரம் நான்கு நாட்கள் மட்டுமே வேலை நாட்களாக அறிவித்துள்ளது. இந்த புதிய நடைமுறையின்படி ஊழியர்களுக்கு சம்பளத்திலிருந்து எந்தவித குறைவும் இருக்காது என்று அறிவித்துள்ளது.

இந்த திட்டம் ஊழியர்களின் உற்பத்தித் திறன் மற்றும் நல்வாழ்வை அதிகரிக்கும் என்று நம்புவதாக இந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த திட்டத்தால் தங்கள் நிறுவனங்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்றும், அதன் வாடிக்கையாளர்களுக்கும் எந்த பிரச்சனையும் இல்லாமல் இருந்தால் படிப்படியாக அந்த நிறுவனம் முழுவதும் இதை கொண்டு வர திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. மேலும் இந்த நடைமுறையை அடுத்த ஆண்டு டிசம்பர் வரை பரிசோதனை முயற்சியாக செய்து பார்க்க உள்ளது. வாரத்தில் நான்கு நாட்கள் வேலை, 3 நாட்கள் விடுமுறை என்ற யோசனைக்கு நியூஸிலாந்து பிரதமர் ஜசிந்தா ஆர்டெர்ன் ஆதரவு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |