Categories
தேசிய செய்திகள்

ஐ.ஏ.எஸ் அதிகாரி மீது பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டு…. மத்திய அரசு எடுத்த அதிரடி நடவடிக்கை….!!!!

அந்தமான்-நிகோபாா் தீவில் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டில் மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரியான ஜிதேந்தா் நாராயண் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா். இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில் “ஒழுக்கத்தை மீறும் அரசுப்பணியாளா்கள் எந்த நிலையில் பணிபுரிந்தாலும், அவா்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ள அரசு தயங்காது. இதுபோன்ற பெண்களின் கண்ணியத்திற்கு எதிரான குற்றச்சாட்டுகளில் கடுமையான நடவடிக்கை மேற்கொள்வதில் எந்த வித சமரசத்துக்கும் இடமில்லை” என அதில் கூறப்பட்டுள்ளது. அதாவது, ஜிதேந்தா் நாரயண் அந்தமான்-நிகோபாரில் தலைமை செயலராகப் பணிப்புரிந்தார்.

அப்போது இவர் பெண் ஒருவரை பாலியல் வன் கொடுமை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது. இது பற்றி அந்தமான் நிகோபாா் காவல்துறையினா் விசாரணை மேற்கொண்டு, உள்துறை அமைச்சகத்துக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை அறிக்கை அனுப்பினா். இதையடுத்து அதற்கு அடுத்த நாளிலேயே அந்த அதிகாரி மீது துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த பாலியல் குற்றச்சாட்டு குறித்து அந்தமான் நிகோபாா் காவல்துறையின் சிறப்பு விசாரணைக் குழுவினா் ஜிதேந்தா் நாரயண் மீது குற்ற வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு இருக்கின்றனர்.

Categories

Tech |