ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகி வரும் ரிபப்ளிக் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் ஐஸ்வர்யா ராஜேஷ். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான திட்டம் இரண்டு, பூமிகா ஆகிய படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது இவர் டிரைவர் ஜமுனா, மோகன்தாஸ் போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார். நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தமிழில் மட்டுமல்லாது தெலுங்கு மொழி படங்களிலும் நடித்து வருகிறார் .
Here is The First Look of #MyraHanson from #REPUBLIC✊! Revealed by our #VishakhaVani a.k.a @meramyakrishnan.#RepublicFromOct1st@IamSaiDharamTej @devakatta @IamJagguBhai #ManiSharma @mynnasukumar @bkrsatish @JBEnt_Offl @ZeeStudios_ @ZeeMusicCompany @JBhagavan1 @j_pullarao pic.twitter.com/yS8s3baC4o
— aishwarya rajesh (@aishu_dil) August 26, 2021
அந்தவகையில் இவர் தேவ் கட்டா இயக்கத்தில் உருவாகி வரும் ரிபப்ளிக் படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். சாய் தரன் தேஜ் இந்த படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். மேலும் ஜெகபதி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஜீ நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு மணிசர்மா இசையமைக்கிறார் . இந்நிலையில் ரிபப்ளிக் படத்தின் அசத்தலான பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. மேலும் இந்த படம் அக்டோபர் 1-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.