Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“ஐஸ்வர்யா பகிர்ந்த புகைப்படத்தில் இருக்கும் தண்ணீர் பாட்டில்”…. ஆத்தாடி இவ்வளவு விலையா…!!!!

ஐஸ்வர்யா பகிர்ந்த புகைப்படத்தில் இருக்கும் தண்ணீர் பாட்டில் பலரையும் கவர்ந்துள்ளது.

ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா. இவர் தனுஷின் மனைவியாக இருந்தவர். ஐஸ்வர்யாவுக்கு தினமும் காலையில் சைக்கிளிங் செல்வதென்றால் மிகவும் பிடிக்கும். அப்படி சைக்கிளிங் செல்லும்போது எடுக்கும் புகைப்படங்களை தனது சமூக வலைதளப்பக்கத்தில் பகிர்ந்து வருகின்றார். நேற்றுக் கூட சைக்கிளிங் செய்த வீடியோவை வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில் இன்று காலை சைக்கிளிங் சென்ற போது எடுத்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் மற்றும் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படத்தில் ஐஸ்வர்யாவின் கையிலிருக்கும் ப்ரோட்டின் வாட்டர் பாட்டில்தான் தற்போது பேசுபொருளாக இருக்கிறது. இதைப்பார்த்த ராசிக்காரர்கள் அது என்ன புரோட்டின் வாட்டர் என கேள்வி எழுப்பி வருகின்றனர்.

அதன் விலையை ஆய்வு செய்த பொழுது அந்த அரை லிட்டர் தண்ணீர் பாட்டின் விலை 150 ரூபாயாம். இதை அறிந்த ரசிகர்கள் என்னாது அரை லிட்டர் தண்ணீர் பாட்டில் விலை 150 ரூபாயா..! என அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் சூப்பர் ஸ்டாரின் மகள் 150 ரூபாய்க்கு என்ன 500 ரூபாய்க்கு கூட தண்ணீர் வாங்கலாம் என கூறி வருகின்றார்கள்.

 

Categories

Tech |