Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

ஐஸ்வர்யா இயக்கத்தில் வெளியான “பயணி”… கவலையில் ரசிகர்கள்… காரணம் என்ன தெரியுமா…???

ஐஸ்வர்யா இயக்கத்தில் வெளிவந்த “பயணி” பாடலால் ரசிகர்கள் சிலர் வருத்தம் அடைந்துள்ளனர்.

பிரபல இயக்குனரான ஐஸ்வர்யா 9 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது பயணி ஆல்பம்பாடலை அனிருத் குரலில் இயக்கியுள்ளார். பயணி பாடலை பிரபல தெலுங்கு நடிகர்களான அல்லு அர்ஜுன், மோகன்லால் மற்றும் மஹேஷ் பாபு வெளியிட்டிருக்கின்றனர். மேலும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் ஐஸ்வர்யாவின் பாடலை பகிர்ந்து வாழ்த்தியுள்ளார்.

இந்நிலையில் பாடலைப் பார்த்து ரசிகர்கள் சிலர் கவலை அடைந்துள்ளனர். காரணம் என்னவென்றால் இந்த பாடலில் அசுரன் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் வெளியான நாரப்பா படத்தின் போஸ்டர் இடம்பெற்றிருக்கின்றது. இதனால் ரசிகர்கள் தேசிய விருது பெற்ற அசுரன் திரைப்படத்தின் போஸ்டருக்கு பதிலாக நாரப்பா போஸ்டர் பாடலின் பின்னணியில் இருப்பதால் இது தவறு என கூறி வருகின்றனர். சில ரசிகர்களோ எதிர்ச்சியாக நடந்த சம்பவம் எனவும் கூறிவருகின்றனர் குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |