தனுஷ் ஐஸ்வர்யாவை பிரித்தாலும் அவரை முறைப்படி விவாகரத்து செய்யும் ஐடியா இல்லை என்று கூறியுள்ளார்.
தனுஷ் ஐஸ்வர்யா கடந்த 18 வருடங்களுக்கு முன்பாக காதலித்து திருமணம் செய்துள்ளார்கள். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளார்கள். இவ்வாறு இருக்க கடந்த ஜனவரி மாதம் இருவரும் தாங்கள் பிரிய போவதாக சமூக வலைத் தளத்தில் பதிவிட்டுள்ளார்கள். இது அனைவரிடத்திலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இவர்களை சேர்த்து வைக்க தனுஷ் ஐஸ்வர்யா குடும்பத்தார்களும், நட்பு வட்டாரங்களும் முயற்சி செய்து வருகிறார்கள். இந்நிலையில் தனுஷ் ஐஸ்வர்யாவை பிரிந்தாலும் முறைப்படி விவாகரத்து செய்யும் ஐடியா இல்லை என்று கூறியுள்ளார். ஆகையினால் தனுஷ் வழக்கறிஞரிடம் விவாகரத்து செய்யாமல் வாழ்ந்தால் ஏதேனும் பிரச்சினை ஏற்படுமா என்று விசாரித்துள்ளார். இதற்கிடையே தனது அப்பாவிற்காக இறங்கிவரும் ஐஸ்வர்யாவை தனுஷ் வேண்டவே வேண்டாம் என்று கூறுவதாக தகவல் வெளியாகியுள்ளது.